தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். போகநல்லூர் அருகே உள்ள முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். ஏற்கனவே 13 வயது சிறுமி டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது நர்மளா (27) என்பவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
