சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்ட அரசுப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்துள்ளது. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம் என சாடியுள்ளார்.
சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை-கோமாளி சர்க்கார்- உதயநிதி கடும் விமர்சனம்
