தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு 13 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tntourismawards.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். தகுதியான நபர்கள் வரும் செப்.30-க்குள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-
