Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏப்ரல் 16ம் தேதி திருச்சிக்கு விடுமுறை…..

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  திருவிழாவின் முக்கிய

மாதிரி படம்

நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார்.  இதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், உலக பிரசித்திப் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி வரும் 16 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் தேர்வுகள் நடக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!