Skip to content

ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.

அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக இருக்கும். நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூட்டணி வைப்பவர்கள் அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

error: Content is protected !!