அரியலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக பணியாற்றியவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட்டபோது இவர் அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளர் ஆக திரம்பட பணியாற்றி பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றாலும் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் திருமாவளவனை விட அதிக வாக்குகள் பெற்று இரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக முன்னணிகள் அதிக வாக்குகள் பெற்றிருந்ததால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டை பெற்றிருந்தார்.
இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் சட்டமன்றத் தொகுதிகள் திமுக களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக இடையே ஒரு கடும் போட்டியாக நிலவும் என்பதில் ஐயமில்லை.
