அரியலூர் – அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பது

நமது உரிமை, ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கங்கள்

செய்தவாரு மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர் பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
