Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் – உயிரிழந்த அனிதாவின் அண்ணன் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு கண்டனம்

அரியலூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றம் வரை சென்று போராடினார். இதன் பின்னர் நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சரண்யா அன்பழகன் நீட் தேர்வால் உயிர் இழந்த சரண்யா குறித்து சில கருத்துக்களை பேசி ரிலீஸ் வெளியிட்டு இருந்தார். இதில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குறித்த கருத்தும் இடம் பெற்றிருந்ததால் அவர் வேட்பாளர் சரண்யா அன்பழகன் மீது குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் ஒரு வீடியோ காணொளி வெளியிட்டுள்ளார். அதில் நீட் தேர்வு குறித்து எந்த புரிதலும் இல்லாமல் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரண்யா அன்பழகன் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தவறான கருத்துக்களை புது வழியில் வெளிப்படுத்தினால் நீதிமன்ற நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவரது கூட்டணி கட்சிகளான நீட் தேர்வை கொண்டு வந்த பாஜக பொறுப்பாளர்களிடமும் கூட்டணியில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களிடமும் கேட்ட அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!