Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கிய தனது புதிய காரை சாலை அருகே உள்ள

வீட்டிலிருந்து சாலைக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவாில்  மோதியதில் கார் தீப்பிடித்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்
காரில் இருந்த அன்பழகனை மீட்க முயற்சித்துள்ளனர். காரின் கதவுகள் லாக் ஆகி இருந்ததால் அன்பழகனை மீட்க முடியாத நிலையில் அவர் பரிதாபமாக காரிலேயே  எரிந்து சாம்பல் ஆன நிலையில் உயிரிழந்தார்.

இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!