Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்… தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மிருணாளினி

அரியலூர்... தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர் மிருணாளினி

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த ஜீப்பில்

மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் உலகெங்கும் சமாதானம் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்த வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டும், இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தைக் குறிக்கும் வகையில் பலூன்களை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் பறக்க விட்டனர். இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த 285 அரசு அலுவலர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி

வழங்கினார். இதன் பின்னர் 51 பயனாளிகளுக்கு 3 கோடியே 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வழங்கினார். விழாவில்

தேசியப்பற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்

நடைபெற்றன.

error: Content is protected !!