தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149- அரியலூர்
மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnels) மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் (Micro Observers) இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (Polling Personnel 2nd Randomization) தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் (Micro Observers) பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் காவல் பார்வையாளர்,தேர்தல் செலவினப்பார்வையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnels) மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் (Micro Observers) இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (Polling Personnel 2nd Randomization) தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான (Micro Observers) பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர் பிரியங்கா சிங்லா, 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர் கைலாஷ் வான்கடே, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, தேர்தல் செலவின பார்வையாளர் லட்சுமி நாராயண பொக்கா, காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி ஆகியோர் முன்னிலையில் இன்று (10.04.2026) நடைபெற்றது.
மேற்படி பயிற்சி வகுப்பில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவில் ஈடுபடும் நுண்பார்வையாளர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளின் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டுமென தேர்தல் பார்வையாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சித்ரா, 149.அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுலவர் செல்வி.பிரேமி, 150.ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் (தேர்தல்) கண்ணன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் மற்றும் cVIGIL App வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்:
- கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 599 4401
- கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04329-228845, 04329-228847
