Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

 

திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோடிலிங்கம் இவரது மனைவி பத்ரகாளி.இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அழகுராஜ் ( 33).இவர் பத்ரகாளியின் மளிகை கடையில் இருந்து பொருட்களை வாங்கி கொண்டு பணம் தர வில்லை. இது தொடர்பாக
அழகுராஜ்யிடம் பத்திரகாளி கேட்டபோது பணத்தை தராமல் திட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று மளிகை கடைக்கு சென்ற அழகுராஜ் அங்கு இருந்த பத்ரகாளியிடம் சிகரெட் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் பழைய பாக்கி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பத்திரகாளியை கீழே தள்ளி மரக்கட்டையை எடுத்து காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஏர்போர்ட் போலீசில் பத்ரகாளி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுராஜை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!