Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஓட்டல்களில் ரெய்டு..

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஆர்யா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தொழில் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஆகையால் திரைத்துறையில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலே ஹோட்டல் பிஸினஸில் கால்பதித்தார்.  அதிலும்  குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களின்  பிரத்யேக வகையிலான உணவுகளை வழங்கும் சீ ஷெல் ( Sea Shell) என்னும் உணவகத்தை தொடங்கினார்.

அவரது உணவகங்கள்  அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் சீ ஷெல் உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  அண்ணாநகர், கொட்டிவாக்கம்,
வேளச்சேரி ஹோட்டல்களில் சோதனை  நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  எதன் அடைப்படையில் சோதனை நடைபெறுகிறது, புகார் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை..

error: Content is protected !!