Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்

நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் கரூர் சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் உற்சாக பேச்சு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக தியாகராஜன் அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று கரூர் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில் பிள்ளையார் கோவில் முன்பு, மக்கள் பாதை தெற்கு தெரு முனுசாமி சந்து மேட்டு தெரு மாரியம்மன் கோவில் முன்புறம் தேர் வீதி ஜவகர் பஜார் பெருமாள் கோவில் பழைய கடைவீதி உள்ளிட்ட 34 இடங்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அனைத்து இடங்களிலும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வேட்பாளரை ஆதரித்து செந்தில் பாலாஜி சகோதரரும் தேர்தல் பொறுப்பாளர் அசோக் குமார் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

செந்தில் பாலாஜி சகோதரரும்,சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் பேசுவையில்:

செந்தில் பாலாஜி கோவை சென்று விட்டார் அதனால் எனக்கு இந்த தடவை ஓட்டு போடுங்க என்று சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜி எங்கேயும் செல்லவில்லை, முன்பு கரூரில் வெற்றி பெற்று கோவையை பார்த்தார் இப்போது கோவையில் வெற்றி பெற்று கரூரையும் சேர்த்து பார்க்கப் போகிறார் அவர் எங்கேயும் செல்லவில்லை காலை கோவை மாலை கரூர் என்று உங்களிடம் தெரிவித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளில் 5,500 கோடிகளைப் பெற்றுத்தந்து தமிழ்நாட்டிலேயே ஒரு மாவட்டத்திற்கு அதிக நிதியை பெற்றுத் தந்தவர் செந்தில் பாலாஜி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை கரூர் எனது இரண்டும் இரு கண்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார் அப்போது 14 தொகுதி பார்த்தார் இப்பவும் 14 தொகுதியை பார்க்க தான் போறார், தட்டு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர்

தியாகராஜன் அவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளார் அவருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் ”நம்ம தான் ஜெயிக்கிறோம்’ ”நம்ம மட்டும்தான் செய்கிறோம்” வாக்களிப்பீர் உதயசூரியன் என பேசினார்.

error: Content is protected !!