சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் கல்லூரி வாயில் முன்பு அமைந்திருந்த தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காவலாளி இல்லாத ஐசிஐசிஐ ஏடிஎம்மில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. காவல் துறை எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் இணைப்பை துண்டித்துவிட்டு கொள்ளையளிகள் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளனர்.
ஏடிஎம்மை உடைக்கப்பட்டதாக சோமங்கலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரகளை ஆய்வு செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை தொடர்பான இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சமீப நாட்களாக தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடித்தல் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தனியார் வங்கி ஏடிஎம்மையதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
