Skip to content

ஆடு-கோவில் உண்டியல் திருட முயற்சி.. சிக்கிய 2 பேர்- 2 பேர் எஸ்கேப்

கரூர் அருகே அய்யம்பாளையத்தில் இரவு நேரத்தில் ஆடு மற்றும் கோவில் உண்டியல் திருட காரில் வந்தால் நான்கு பேர்,
இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு. இருவர் காரில் தப்பி ஓட்டம்.

கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் மக்கள் உறங்கும் சமயத்தில் காரில் வந்த நான்கு மர்ம நபர்கள், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோவில் உண்டியலை திருடவும் முயற்சித்துள்ளனர்.

அப்பொழுது சத்தம் கேட்டு, ஆட்டின் உரிமையாளர் கூச்சலிட்டபோது, பொதுமக்கள் இருவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து, மரத்தில் கட்டி வைத்துவிட்டு, வெள்ளியணை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு, வந்து இரண்டு இளைஞர்களை மீட்டு வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் 29 , பெரியமருது 28 ஆகிய இருவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மீதும் ஏற்கனவே ஆடு திருடியதாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காரில் தப்பியோடிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஆடு திருடும் திருடர்கள் பொதுமக்களால் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!