Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் காவல் நிலையம் எதிரில் வங்கியில் கொள்ளை முயற்சி.. பரபரப்பு

திருச்சி மாநகரம் கண்ட்டோண்மென்ட் காவல் நிலையம் எதிரே வார்னர்ஸ் சாலையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இன்று வங்கி விடுமுறை என்பதால் காலையில் வங்கி திறக்கப்படவில்லை. ஆனால் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர் மோப்ப நாய் காவேரியும் வரவழைக்கப்பட்டது.
வங்கியில் மூன்று பூட்டுகள் இருந்த நிலையில் இரண்டு பூட்டுகளை மர்ம நபர் ஒருவர்

உடைத்துள்ளார். பூட்டுகள் உடைக்க சிரமம் ஏற்பட்டதால் அவர் மற்ற பூட்டை உடைக்காமல் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கண்ட்டோண்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோப்பநாய் காவேரி வங்கியில் இருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையம் சாலையில் வேகமாக ஓடியது போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஒரு பூட்டு உடைக்க முடியாமல் கொள்ளையன் சென்று விட்டதால் வங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை பணம் தப்பியது. காவல் நிலையம் எதிரே உள்ள வங்கியிலேயே கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!