Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இது “எமர்ஜென்சியைவிட மோசமான காலம்”- கெஜ்ரிவால் கடும் தாக்கு

இது "எமர்ஜென்சியைவிட மோசமான காலம்"- கெஜ்ரிவால் கடும் தாக்கு

டில்லி: “இது அவசர நிலைக் காலத்தைவிட (எமர்ஜென்சி) மிக மோசமானது” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் பிற தலைவர்களை டெல்லி போலீஸ், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே கைது செய்து தடுத்து நிறுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை வெளிப்படுத்துகிறது.நாடு தற்போது முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழல், இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலைக் காலத்தை விடவும் மோசமானதாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைகேடு மற்றும் வாக்குத் திருட்டு விவகாரத்திற்கு பொறுப்பேற்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைகேடு (வாக்குத் திருட்டு) மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்குத் தெளிவாகத் தெரியும்; இப்போது ஜனநாயகத்தை முற்றிலுமாக நசுக்குவதன் மூலம் அந்த மோசடியைப் பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!