தவெக ஆட்சி காலம் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வெற்றி தற்காலிகமானது. உண்மையான முகம் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. எடப்பாடி தலைமையில் ஆட்சி வரும் காலம் அமையும் என முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேட்டி.
கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கரூர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
சிறப்புரையாற்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான

ஆர்.பி. உதயகுமார்,கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ம. சின்னச்சாமி, கரூர் மாவட்ட கழகச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார்
அதிமுக தொண்டர்கள், விசுவாசிகள் தாராபுரம் தொகுதியில் வாக்களித்து இருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் அடக்கு முறையை தாண்டி தான் 25% வாக்குகளை பெற்று இருக்கிறோம்.

ஆளில்லாத இடத்தில் எல்லாம், 5 அடுக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள். தூய சக்தி என்று சொல்லிக் கொண்டு டிபன் பாக்ஸில் பணம் கொடுத்தும், காமாட்சி விளக்கு கொடுத்தார்கள், ஒன்றிய செயலாளர்களை விலைக்கு வாங்கி தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 2 நாள் பிரச்சாரத்தில் ஆளும் கட்சி 37% தான் கிடைத்து இருக்கிறது. 63% பேர் தவெக வேண்டாம் என வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்த்து நிற்கின்ற கட்சிகளை டெபாசிட் காலி செய்கிறேன் என்றார்கள். ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடக்கவில்லை, அதிமுக வெற்றி பெறக் கூடாது என எங்களை காவல் துறையை வைத்து மிரட்டுகிறார்கள். ஆண்டவன் சாட்சியாக மிகைப்படுத்தி சொல்லவில்லை, கள நிலவரத்தை சொன்னேன். மக்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிகையை காட்டுகிறது. கரூர் இடைத் தேர்தலில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
தவெக ஆட்சி காலம் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வெற்றி தற்காலிகமானது. உண்மையான முகம் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. எடப்பாடி தலைமையில் ஆட்சி வரும் காலத்தில் அமையும்.
களத்தில் பார்த்ததை சொல்கிறோம். 10% பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்னும் கடுமையாக உழைத்து, 75 ஆண்டு காலம் திமுக, 100 ஆண்டு காலம் காங்கிரஸ் எல்லாம் அதிமுகவை அழிக்க நினைத்தது, இரண்டரை ஆண்டுகள் ஆன தவெகவும் அழிக்க நினைக்கிறது. அது நடக்காது.
ஒரே ஒரு தோல்வி மக்கள் பரிசாம கொடுத்தால், போதும், ஓடி விடுவார்கள். அவர்களுக்கு போராட்ட குணம் என்று எதும் கிடையாது. அம்மா மீது ஏகப்பட்ட வழக்குகள் போட்டார்கள். எம்.ஜி.ஆரின் கால் தூசிக்கு கூட விஜய் கிடையாது.
வரும் காலத்தில் இரட்டை இலை வெற்றி பெறும். கட்சியை விட்டு வெளியில் போனவர்களை அழைத்து பேச வாய்ப்பிருக்கா என்ற கேள்விக்கு, நிச்சயம் பொதுச் செயலாளர் நல்ல முடிவு எடுப்பார்.
தொகுதி ஜெயிப்போம் என சேகர்பாபு சொன்னார், இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத விஜய் வரும் காலத்திலும் விஜய் அரசாங்க வேலையை பார்ப்பார் என நினைக்கிறேன், அம்மா போன்று அவர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் பொது வாழ்க்கையை விட்டு வெளியேறி விடுகிறேன் என்றார்.
