Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

மாநில அளவில் பெண்கள் கல்லூரிகளுக்கு இடையேயான அட்யா பட்யா போட்டிகள் – பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீராங்கனைகள் பங்கேற்பு

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி
2நாட்கள் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான அட்யா பட்யா போட்டியை கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அல்லி துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி, ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரி, அய்மான் பெண்கள் கல்லூரி, ஜீவா கிளிப், மற்றும் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட அணியின் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இப்போட்டின் நடுவர்களாக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ், திருவாரூர் மாவட்டச் சேர்ந்த ஜெய்சங்கர் ஆகியோர் வெற்றி பெறும் வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.

இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்
பட்டத்தினை முதல் இடத்தில் திருவள்ளூர் மாவட்ட அணியும், 2வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட அணியும், 3ம் இடத்தில் ஈரோடு மாவட்ட அணியும், 4ம் இடத்தில் சென்னையில் அணியினரும் பெற்றனர்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காமகோடி வித்யாலயா பள்ளியின் முன்னாள் முதல்வர் சாந்தலட்சுமி, தமிழ்நாடு அட்யா பட்யா சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியன், திருநெல்வேலி நடுவர் இசக்கிராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு திருச்சி சாவித்திரி வித்யாலையா ஹிந்து பெண்கள் கல்லூரியில் முன்னாள் தலைமை ஆசிரியர் உஷா வழங்கினார்.

போட்டியினை திருச்சி மாவட்ட அட்யா பட்யா சங்கத்தின் தலைவரும், பயிற்சியாளருமான கந்தமூர்த்தி, செயலாளர் பிரசாந்த், பொருளாளர் கார்த்திக் மற்றும் உடற்கல்வி ஆசிரியை முனைவர் சுதாமது ஆகியோர் நடத்தினர்.

error: Content is protected !!