கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(31). இவருடன் வசித்தவர் சுகாசினி (29). இவர், திருநங்கை ஆவார். இவரது சொந்த ஊர் பல்லாரி மாவட்டம் ஜாகனூரு ஆகும். சேகரின் சொந்த ஊர் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா மல்லனகுடி கிராமம் ஆகும்.
ஆட்டோ டிரைவரான சேகர், சுகாசினி திருநங்கை என்று தெரிந்தும், அவரை காதலித்து வந்துள்ளார். மேலும் கடந்த 6 ஆண்டுகளாக ஒரே வீட்டில் 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டின் ஜன்னல் கம்பியில் சேகர் மற் றும் சுகாசினி தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதைப்பார்த்து சக திருநங்கைகள் அதிர்ச்சி அடைந்து புரூஸ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். சேகர், சுகாசினி தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்களா?, அல்லது சுகாசினியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட பின்பு, சேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? என்பது மர்மமாக உள்ளது. ஆனால் பணத்துக்காக தான் சுகாசினியுடன் சேகர் கடந்த 6 ஆண்டுகளாக வசித்ததாகவும். பணப்பிரச்சினையில் சுகாசினியை கொன்றுவிட்டு சேகர் தற்கொலை செய்திருப்பதாகவும் சக திருநங்கைகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பு தான் அதுபற்றி தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில், திருநங்கையுடன் சேகர் குடும்பம் நடத்தி வந்தது அவரது பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது பெற்றோர் மணப்பெண் தீவிரமாக தேடி வந்தனர். இந்த தகவல் சுஹாசினிக்கு தெரிய வந்தது. இதனை சேகரிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிறகு வீட்டிற்கு வந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சேகர் சுஹாசினியை சேலையால் இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவரும் வீட்டு ஜன்னலில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து புரூஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

