Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டோ திருட்டு… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்


ஆட்டோ திருட்டு..

திருச்சி மலைக்கோட்டை அரச மர சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யகுமார் (31) ஆட்டோ டிரைவர் இவர் தன் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தினார் மறுநாள் வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போனது தெரிய வந்தது இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்த பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்வர் பாஷா ( 28 ) என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை
பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அவரை ஜாமினில் விடுவித்தனர்.

புகையிலை விற்றவர் கைது

திருச்சி எடமலை பட்டிப்புதூர் எஸ்பிஐ காலனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சென்று புகையிலை விற்ற
எடமலைப்பட்டி புதூர் சீனிவாச நகரை சேர்ந்த அப்துல்லா 26 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 80 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து அந்த வாலிபரை ஜாமினில் விடுவித்தனர்

தற்கொலை செய்து கொள்ள முயன்ற வாலிபர்.. மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மலையப்பன் ( 71 ) இவரது மகன் முகேஷ் (24)இவர் கோவையில் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று அவரது தந்தை அவரை கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தார் அப்போது முகேஷ் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார் அங்கு நான்காவது மாடியில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார் அப்போது கயிறு அறுந்து அவர் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!