Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மோசமான வானிலையால் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்க தரிசனத்துக்காக புறப்பட்டுச்செல்கின்றனர்.

3880மீட்டர் உயரத்தில் குகைக்கோயிலில் இதுவரை 3.45லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். 3ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மோசமான வானிலையால் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலவும் சீரற்ற வானிலை, பக்தர்களின் வருகை குறைவால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!