Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூர் நெரிசலில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணும் பலி

பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர்.  இவர்களில் 6 பேர் பெண்கள், ஒரு குழந்தை  4 பேர் ஆண்கள் .  இறந்தவர்களின் உடல் உடற் கூறு ஆய்வு செய்யப்பட்ட  இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த  பெண்ணும் இந்த விபத்தில் இறந்து  உள்ளார். அவரது பெயர் காமாட்சி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். காமாட்சியின் தந்தை பெயர் மூர்த்தி. இவர் தனியார் பள்ளியில் தளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். காமாட்சி பெங்களூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்றைய தினம் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அவர் பலியாகி உள்ளார்.  இன்று மதியம் அவரது உடல் பெங்களூரில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது.  இந்த சம்பவத்தால் உடுமலைப்பேட்டையில் உள்ள காமாட்சி குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இது தவிர திவ்யான்ஷி( 13), தியா (26),  என்ற பெண்களும் பலியாகி உள்ளனர். மற்றவர்களின் பெயர் விவரம் கிடைக்கவில்லை.

 

error: Content is protected !!