கேரளம்: கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் தான் ஒரு இந்தியர் என ஏமாற்றி, கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பிப்லோப் சோரன் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். Laundry பிரிவில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கடற்படை அதிகாரிகள், சோதனையிட்டதில் வங்கதேச நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
