திருச்சி உறையூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) மகளிர் பள்ளிக்குச் செல்லும் பாதையில், ஆளும் கட்சியின் பிறந்தநாள் விழா விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதற்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் மற்றும் சிறுவர்கள் சென்று வரும் பள்ளி வளாகப் பாதையில் விளம்பரப் பேனர்களை வைத்து இடையூறு ஏற்படுத்துவதைக் கண்டித்துள்ள பா.ஜ.க நிர்வாகிகள், பள்ளிக் கல்வித் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனை வன்மையாக கண்டித்து பாஜக உறையூர் மண்டல தலைவர் ராஜேஷ் கூறியதாவது….
திருச்சி,உறையூர் CSI மகளிர் பள்ளி செல்லும் வழி சுற்றி ஆளும் கட்சியின் பிறந்தநாள் விழா பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஒரு பள்ளி வளாகம் செல்லும் வழியில் இது போன்று செய்வது நம் எதிர்கால சந்ததியினருக்கு என்ன ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தர முற்படுகின்றோம்.
அரசியல் கட்சியின் பகுதி தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தந்தையாக இதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதுபோன்று பள்ளி மற்றும் பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், இதுபோன்ற பள்ளி வளாகத்திற்குள் பேனர்கள் வைப்பதால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் தவெகவினரின் அட்ராசிட்டி அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறையும் திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக இத்தகைய பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
