Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாவட்ட எல் ஆர் ஜி நாயுடு கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப் சென்னை, சி.ஆர்.பி.எஸ் புது டெல்லி, இந்தியன் நேவி, லோனாவில்லா, இந்தியன் ஏர்போர்ஸ் புது டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில் வடக்கு ரயில்வே, புது டெல்லி, மத்திய ரயில்வே மும்பை, மேற்கு ரயில்வே மும்பை, தெற்கு மேற்கு ரயில்வே ஹூப்ளி என 4 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வந்தது ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற இந்தியன் நேவி அணியும் இந்தியன் ஏர்போர்ட் அணியும் மோதியதில். 85 க்கு 90 என்ற புள்ளி என்ற கணக்கில் இந்தியன் ஏர்போர்ட் அணி நியூ டெல்லி வெற்றி பெற்றது.

அதே பெண்கள் பிரிவில் சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்ளி அணியும் நார்த் ரயில்வே நியூ டெல்லி அணியும் மோதியதில் 68 என்ற 56 புள்ளி கணக்கில் வெஸ்டர்ன் ரயில்வே ஹூப்பி அணி வெற்றி பெற்றது. இன்றுடன் நாக் மற்றும் லிக் அவுட் முறையில் போட்டிகள் நிறைவு பெற்றது. நாளை மற்றும் மறுநாள் கால் இறுதி மற்றும் அரை இறுதி, இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. வெற்றி பெற்று அணிவதற்கு ரொக்க பரிசு மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!