வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை

பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில

ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் .ஜல்லிக்கட்டு ராஜேஷ்

உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

