Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாமிரபரணி வெள்ளத்தில் வந்த 15.6 கிலோ கெண்டை மீன்……. வலைவீசி பிடித்த வாலிபர்

தென்மாவட்டங்களில் கடந்த 17ம்தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்டவைகளில் மறுகால் பாய தொடங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக  தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது.

நேற்று அணைக்கட்டு பகுதியில் முக்கூடல் அடுத்த  சிங்கம்பாறை பகுதியை சேர்ந்த ஜாக்சன் துரை என்பவர் வலை வீசி மீன் பிடித்துள்ளார், அப்போது ராட்சத மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது.  போராடி வலையை இழுத்து மீனை வெளியே கொண்டு வந்தபோது ராட்சத கெண்டை மீன் சிக்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மீனை எடை பார்த்த போது சுமார் 15.600 கிலோ எடை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ராட்சத கெண்டை மீனை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!