Skip to content

பிரபல சாப்ட்வேர் நிறுவனரின் மனைவியுடன் பில்கேட்ஸ் டேட்டிங்…

  • by Authour

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட பீப்புள் மேகசீன் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆரக்கிள் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஹர்த். ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனத்தின் முன்னாள் முதலாளியாகவும் இருந்தவர். இவரது மனைவி பவுலா ஹர்த். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் ஹர்த் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் பவுலாவுடன், பில் கேட்ஸ் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்து உள்ளது. இருவரும் டேட்டிங்கில் உள்ளனர் என பரவலாக தெரியும். ஆனால், கேட்சின் குழந்தைகளை பவுலா இன்னும் சந்திக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!