Skip to content

பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் (19), சபரிவாசன் (18) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் இணைந்து முகமது இஸ்மாயிலின் இருசக்கர வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சபரிவாசனை போலீசார் கைது செய்து 15 நாள் காவலில் வைத்தனர். மேலும், தப்பியோடிய தீபக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருடப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!