Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வானதி சீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். டாக்டர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

error: Content is protected !!