Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னை அமைந்தகரையில் நடைபெறும். இதில் அண்ணாமலை கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு  பாஜக நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட உள்ளது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் மேலிட பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!