Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் மட்டும் பிஜேபி-க்கு 2 சின்னங்கள்- திருமா.,விமர்சனம்

தமிழ்நாட்டில் மட்டும் பாஜக-விற்கு இரண்டு சின்னம் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்து உள்ளார். விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தை பொறுத்த வரை பாஜக-வின் நேரடிச் சின்னம் தாமரை என்றும், அதன் மற்றொரு (மறைமுக) சின்னம் இரட்டை இலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பது, மறைமுகமாக பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவே உதவும் என்று அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுத்துரைத்தார். அதிமுக கொள்கை இல்லாத ஒரு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதிமுக-வை துவக்கிய எம்ஜிஆர், அதனை கட்டி காத்த ஜெயலலிதா அம்மையார் இருவருமே தற்போது இல்லை.

அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், அம்மையார் ஜெயலலிதாவின் வாரிசு போல செயல்படவில்லை. அதிமுக-வை மத்தியில் ஆளும் பாஜக-விடம் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு விட்டுவிட்டார், அடமானம் வைத்து விட்டார். இந்த சூழலில் நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு போடப்படும் ஒவ்வொரு ஓட்டும், அதிமுக-விற்கு இல்லை, மோடிக்கு தான் போய் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து அதிமுக மூலம் பாஜக வெற்றி பெற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். அதே போல 100 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று விட்டாலே தமிழக அரசியலை தலைகீழாக பாஜக புரட்டி போட்டுவிடும். மேலும் அதிமுக-வை வீழ்த்த போவது பாஜக-தான் என்பதையும் அந்த கட்சி தொண்டர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

ஒருவேளை தேர்தலில் ஜெயித்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் எண்ணி அடுத்த ஆறே மாதங்களில் அது பாஜக-வின் ஆட்சியாக மாறிவிடும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக்காத்த சமூக நீதியை காப்பாற்ற விரும்பும் அதிமுக தொண்டர்களும் கூட, தற்போது தங்களின் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறி உள்ளார். தப்பி தவறி ஒரு வேளை எடப்பாடி பழனி்சாமி முதல்வரானால் அவரின் பதவி சில மாதங்களுக்குள் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக, பாஜக-வை சேர்ந்த தமிழக தலைவர்களில் யாரேனும் ஒருவரை மாநிலத்தின் முதல்மைச்சராக்கி விட கூடும் என்றும் திருமாவளவன் எச்சரித்து உள்ளார்.

error: Content is protected !!