Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உபி பாஜ., அமைச்சர் பதவியை நீக்கக்கோரி புதுகையில் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகவாயிலில் தொழிலாளர் முன்னேற்றசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள்மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து உத்திரபிரதேசம் லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி
கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தொ.மு.ச.செயலாளர் கி.கணபதி தலைமை
வகித்தார்.தொ.மு.சதலைவர்அ.ரெத்தினம், போக்குவரத்துக்கழக தொ.மு.ச.பொதுச்செயலாளர் வேலுச்சாமி,
மூர்த்தி (டி என்.சி.சி.) ஜெயக்குமார்(ஏ.ஐ.டி.யூ.சி)திருநாவுக்கரசு, சுந்தர்ராஜன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!