தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் பேசியதாவது; “இன்று நாம் எதிர்கொண்டிருப்பது தேர்தல் களம் மட்டுமல்ல, போர்க்களம். தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என சதி செய்கிறார்கள். தென்மாநிலங்களில் தேர்தல் என்பது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். பாஜக செய்துள்ள சூழ்ச்சிதான் தொகுதி மறுவரையறை. தென் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கப் போவது போல தெரியும்.
தமிழ்நாடு விளையாட்டு
உள்ளபடியே தமிழ்நாட்டு தொகுதிகளுக்கான எண்ணிக்கையை குறைத்துள்ளனர். முதலமைச்சரின் எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு. கருப்புக் கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன என ஏளனப்படுத்தி பேசியுள்ளார் ஓம் பிர்லா; பிர்லாவுக்கு நாடாளுமன்றத்தில் உரிய பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி; ஓம் பிர்லாவுக்கு சொல்கிறேன்.. தமிழ்நாட்டில் கருப்பு, சிவப்பு, நீலக் கொடிதான் பறக்கும். தமிழ்நாட்டில் காவிக்கொடி பறக்காது; காவிக் கொடியை மக்கள் பறக்க விடமாட்டார்கள்.
தமிழ்நாட்டில் நெஞ்சுரத்துடன் போராட வேண்டிய ஒரு அரசு அமைய வேண்டும். தமிழ்நாடா, டெல்லியா என்ற போரில் பாஜக என்னும் பருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும். பாஜகவின் அடிமை எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிக்கவேண்டும். உலக மகா துரோகியை உலகுக்கு காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம்தான். குமரி முதல் திருவள்ளூர் வரை வளர்ச்சியடைய வேண்டும் என உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி வருகிறோம். தேனி மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது.
தேனி மாவட்டமே திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, கூட்டுக் குடிநீர் திட்டம், 11 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை வளர்க்க வாக்கு கேட்கிறார் பழனிசாமி. தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு சிறப்புத் திட்டத்தையாவது சொல்லுங்கள் என மோடியை கேட்கிறேன். பழனிசாமியின் என்.டி.ஏ. கூட்டணியால் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்மை கிடைத்துள்ளதா?. தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்கு இல்லை என்று சொல்லுங்கள்.
அதிமுக ஆட்சியில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட பழனிசாமியிடம் கேட்டேன், பதில் இல்லை. மதுரை, கோவை மெட்ரோ திட்டத்துக்கு இன்னும் ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை. சென்னை மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கவில்லை; கல்வி நிதியை தர மறுக்கிறது ஒன்றிய அரசு. முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
Long Distance Bus & Rail
சசிகலா காலை வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்ய பார்க்கிறார். சசிகலா காலில் விழுந்து, அவரது காலை வாரிவிட்டு துரோகம் செய்தவர் பழனிசாமி. தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து திகார் சிறை சென்றவர் டிடிவி தினகரன். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவில்லை என்றாலும் பழனிசாமிக்கு கவலை இல்லை “என தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
