திருச்சி, மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (45), இவர் பி.வி.சி.பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை பிரிவு சாலை அருகே சென்ற போது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
