Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் பிரதமராக வேண்டும் என முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் வெளிப்படையாக ஆதரித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

“காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். திமுக சார்பில் நாங்கள் கருத்து தெரிவிப்பது முக்கியமல்ல. காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியே இதுபற்றி அறிவிக்காத காலகட்டத்தில், எங்கள் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் அறிவித்தார்” என்றார்.

தற்போது கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும்போது, அதுகுறித்து காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

error: Content is protected !!