Skip to content

கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில்  நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இந்த பேரணியை   மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர்  இதில் பங்கேற்றனர்.

அவர்கள் கையில் பதாகையை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் சென்றனர். இப்பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி, காந்திகிராமம் வழியாக திருச்சி சாலையில் சென்று மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே முடிவடைந்தது. இதில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்களும்  இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!