தெலங்கானா மாநிலம் அம்பராபாத் பகுதியில் புர்ஹானுத்தீன் என்ற 50 வயது நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், புர்ஹானுத்தீனை அவரது மனைவியே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எங்கு சென்றுள்ளார்? என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
