Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிகூண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மயிலாடுதுறையில் பரபரப்பு

ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 ம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100அடி உயரம் கொண்ட மணிகூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை மணிகூண்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்கட்டுப்பாட்டு அறை 100ஐ தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர்  தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக போலீசார் மணிகூண்டு பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்.

திருவாரூரில் இருந்து மோப்பநாய் குகன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார்’ விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இதனால் மயிலாடுதுறை நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!