Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்….

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்து உள்ளது. அதில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அதனால் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பெயரில் மிரட்டல் வந்து உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடைபெற்றது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படையினா் ஆகியோருடன் கோவை மாநகர போலீசாரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் பெயரில் மின்னஞ்சல் வந்து உள்ளதாகவும், அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அநீதி அதிகரித்து உள்ளதாகவும், இறைவன் உங்களை தண்டிப்பார் என்றும் காற்று, மேகம், வானம் போன்ற வாசகங்கள் உள்ளதாகவும் அது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!