Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ‘இ-மெயிலுக்கு’ நேற்று ஒரு கடிதம் வந்தது. அதில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதுதொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணர்களும், போலீசாரும் மோப்ப நாயுடன் விரைந்து சென்று குஷ்பு வீட்டில் சோதனை நடத்தினார்கள். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இதுதொடர்பாக ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்

error: Content is protected !!