Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது.

அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில் ஆர் டி எக்ஸ் பாம் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திருச்சி மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவல

கம் ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை செய்தனர்.

திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் வேலுச்சாமி உதவி ஆய்வாளர்கள் அருளானந்தம் ரமேஷ் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமையில் அங்குலம் அங்குலமாக

சோதனை நடைபெற்றது. பாம் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

error: Content is protected !!