Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு-திருச்சியில் துணிகரம்

திருச்சி கே கே நகர் உடையான் பட்டி இபி காலனி இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (63) இவர் கடந்த 31ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 20ந் தேதி வீட்டிற்கு வந்த பணிப்பெண் வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முத்துகிருஷ்ணன் கேகே நகர் போலீசார் தகவல் கொடுத்தார். இது குறித்து கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க காசு மட்டும் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து முத்துகிருஷ்ணன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க காசு, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!