தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், இன்று ஆடுதுறை பகுதியில் தொடங்கி வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பிரச்சார வாகனத்தில் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு ஆடுதுறை வெற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மருத்துவமனை தஞ்சம் அடைந்துள்ளனர். தகவலயறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அழகேசன், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
