காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கர்நாடக காவிரி படுகை பகுதிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க இயலாது. மாநிலத்தின் நீர் தேவைகள் மற்றும் நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
