Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரி மீது கார் மோதி… காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் பலி

லாரி மீது கார் மோதி... காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த நவீன் (23), சத்யா (19) ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் வசித்து வந்த இவர்கள், பெற்றோர் சமரசமாக அழைத்ததால் நேற்று அதிகாலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே சென்னசமுத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் லேசான காயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!