கர்நாடகாவின் துமக்கூரு ஊரகம் சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கௌடாவின் மகள் ஐஸ்வர்யா, பெண் காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், பாஜக எம்எல்ஏ மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியது. இது தொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பெண் காவலர் கன்னத்தில் அறை-பாஜக எம்எல்ஏவின் மகளால் பரபரப்பு
