Skip to content

பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக அளவில் மது அருந்தியிருந்தது போலீசாரின் முதற்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதையில் இருந்ததால் காரை நிலைதடுமாறி ஓட்டியுள்ளனர்.

மோதிய வேகத்தில் பெட்ரோல் மீட்டர் பாக்ஸ் அடியோடு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தானியங்கி பாதுகாப்பு வால்வுகள் செயல்பட்டதால் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கார் வருவதைக் கண்டு அலறியடித்து ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய 5 பேரையும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்துக் கைது செய்தனர். அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபோதையில் வாகனத்தை ஓட்டுதல், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் போக்குவரத்துத் துறைக்குப் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

error: Content is protected !!